/
உள்ளூர் செய்திகள்
/
பெரம்பலூர்
/
லிப்ட் கேட்டு ஏறிய ஜோதிடர் டூ - வீலர் - பஸ் மோதலில் பலி
/
லிப்ட் கேட்டு ஏறிய ஜோதிடர் டூ - வீலர் - பஸ் மோதலில் பலி
லிப்ட் கேட்டு ஏறிய ஜோதிடர் டூ - வீலர் - பஸ் மோதலில் பலி
லிப்ட் கேட்டு ஏறிய ஜோதிடர் டூ - வீலர் - பஸ் மோதலில் பலி
ADDED : பிப் 17, 2024 02:01 AM
ஆலம்பாடி:பெரம்பலுார் மாவட்டம், ஆலம்பாடி கிராமம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் கரிகாலன், 45. இவர், நேற்று மதியம் 12:00 மணிக்கு, 'டி.வி.எஸ்., எக்ஸ்.எல்., டூ - வீலரில் பெரம்பலுாருக்கு சென்றார்.
அப்போது, வழியில் சேலம் மாவட்டம், பள்ளப்பட்டியைச் சேர்ந்த சோலைராஜா, 73, என்ற ஜோதிடர், கரிகாலன் ஓட்டி வந்த டூ - வீலரில், பெரம்பலுார் செல்ல 'லிப்ட்' கேட்டு ஏறினார். வயதானவர் என்பதால், கரிகாலனும் ஏற்றிச் சென்றார்.
அப்போது, ஆலம்பாடி -- பெரம்பலுார் சாலையில், பெரம்பலுாரில் இருந்து வந்த மினி பஸ், டூ - வீலர் மீது மோதியது. இதில், டூ--வீலரை ஓட்டி வந்த கரிகாலன், ஜோதிடர் சோலைராஜா சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
தகவலறிந்து, சம்பவ இடத்துக்கு வந்த கரிகாலனின் உறவினர்கள் விபத்து ஏற்படுத்திய மினி பஸ்சை அடித்து நொறுக்கினர்.
இதுகுறித்த புகாரின்படி, பெரம்பலுார் போலீசார் வழக்கு பதிந்து, மினி பஸ் டிரைவரான மேலப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு கரிகாலன், 44, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.