/
உள்ளூர் செய்திகள்
/
பெரம்பலூர்
/
கிண்டல் செய்த மாணவரை நையப்புடைத்த ஆசிரியர்
/
கிண்டல் செய்த மாணவரை நையப்புடைத்த ஆசிரியர்
ADDED : பிப் 04, 2024 02:39 AM

பெரம்பலுார்: பெரம்பலுார் மாவட்டம், அரும்பாவூர் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் மகன் லோகேஷ், 14; கவுண்டர்பாளையம் கிராம அரசு உயர்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார்.
இவர், நேற்று முன்தினம் பள்ளியில் சக மாணவர்கள் நான்கு பேருடன் சேர்ந்து, பள்ளி ஆசிரியர் செல்வராஜை பந்தால் அடித்து, கிண்டல் செய்துள்ளார். ஆசிரியர் செல்வராஜ், இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் சுஜாதாவிடம் முறையிட்டதுடன், மாணவர்கள் நான்கு பேரையும் நைய புடைத்துள்ளார். இதில், மாணவன் லோகேசுக்கு காயம் ஏற்பட்டது.
லோகேஷ் தன் பெற்றோரிடம் தெரிவிக்க, அவரது தந்தை சுரேஷ் அரும்பாவூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.