/
உள்ளூர் செய்திகள்
/
பெரம்பலூர்
/
திருமாவளவனின் அக்கா மகன் ஆதரவாளர்களால் வீடுகள் சூறை
/
திருமாவளவனின் அக்கா மகன் ஆதரவாளர்களால் வீடுகள் சூறை
திருமாவளவனின் அக்கா மகன் ஆதரவாளர்களால் வீடுகள் சூறை
திருமாவளவனின் அக்கா மகன் ஆதரவாளர்களால் வீடுகள் சூறை
ADDED : ஜன 19, 2025 01:12 AM
பெரம்பலுார்:பெரம்பலுார் மாவட்டம், திருமாந்துறை கிராமத்தை சேர்ந்தவர் இளையராஜா, 55. இவர், வி.சி.க., தலைவர் திருமாவளவனின் அக்கா பானுமதியின் மகன். இதே கிராமத்தை சேர்ந்தவர் செல்வமணி, 50; அ.தி.மு.க., வேப்பூர் வடக்கு ஒன்றிய செயலர்.
ஒரே சமூகத்தைச் சேர்ந்த இருவரும் தங்கள் ஆதரவாளர்களுடன் இரு பிரிவாக செயல்படுவதாகவும், அடிக்கடி இருபிரிவினருக்கு இடையே மோதல் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.
கோவில் விழா சம்பந்தமாக நேற்று முன்தினம் இரவு செல்வமணி ஆதரவாளர்களான செல்லமுத்து, கொளஞ்சி, அண்ணாதுரை, ராஜ்குமார், செல்வராஜ் ஆகிய ஐவரின் வீடுகளில் புகுந்த இளையராஜாவின் ஆதரவாளர்கள், வீட்டிலிருந்த பொருட்களை சூறையாடியதாக தெரிகிறது.
தடுக்க முயற்சித்த அம்சவள்ளி, செல்லம், செம்பருத்தி ஆகியோர் படுகாயமடைந்து பெரம்பலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
எந்நேரத்திலும் இரு பிரிவினருக்கும் மோதல் ஏற்படும் சூழ்நிலை உள்ளதால், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இளையராஜா, திருமாவளவனின் உறவினர் என்பதால், அவர் மீது மங்கலமேடு போலீசில் புகார் கொடுத்தும், நடவடிக்கை எடுக்கவில்லை என, பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

