/
உள்ளூர் செய்திகள்
/
பெரம்பலூர்
/
'ரூட்'டை மாற்றி 'வெரைட்டி' திருட்டு பெரம்பலுாரில் போலீசுக்கு தலைவலி
/
'ரூட்'டை மாற்றி 'வெரைட்டி' திருட்டு பெரம்பலுாரில் போலீசுக்கு தலைவலி
'ரூட்'டை மாற்றி 'வெரைட்டி' திருட்டு பெரம்பலுாரில் போலீசுக்கு தலைவலி
'ரூட்'டை மாற்றி 'வெரைட்டி' திருட்டு பெரம்பலுாரில் போலீசுக்கு தலைவலி
ADDED : பிப் 08, 2025 01:14 AM
பெரம்பலுார்:பெரம்பலுார் மாவட்டத்தில் வெரைட்டியாக நடக்கும் திருட்டு சம்பவங்கள், போலீசுக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளன.
பெரம்பலுார் மாவட்டத்தில் பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு, பூட்டை உடைத்து, வீட்டில் உள்ள நகை, பணம் உள்ளிட்ட பொருட்களை திருடர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இதனால், பொதுமக்கள் வெளியூர் செல்லவே அச்சப்பட்டனர். இரவு நேரங்களில் வெளியூரில் தங்குவதை தவிர்த்து, எங்கு சென்றாலும் மாலைக்குள் வீடு திரும்பி விடுகின்றனர்.
இதனால், தங்கள் 'தொழில்' பாதிக்க, அதிர்ச்சியடைந்த கொள்ளையர்கள், சில மாதங்களாக திருட்டை வெரைட்டியாக மாற்றி விட்டனர். அதன்படி, போட்டோ ஸ்டுடியோக்களில் புகுந்து அங்குள்ள கேமரா உள்ளிட்ட பொருட்களை திருடினர். வயல்வெளிகளில் உள்ள மின்மோட்டார்களை திருடினர்.
தற்போது மக்காச்சோளம் அறுவடை நடந்து வருவதால், சாக்கில் கட்டப்பட்டு வயல்பகுதியில் இருக்கும் மக்காச்சோளக்கதிர் மூட்டைகளை திருடி உள்ளனர்.
இரண்டு நாட்களாக இதையும் மாற்றிய கொள்ளையர்கள், லாரிகளில் உள்ள பேட்டரிகளையும், டீசல் மற்றும் இரும்பு சாமான்களையும் திருடி வருகின்றனர். ஒரே மாதிரியாக இல்லாமல், வகை வகையான பொருட்களை திருடுவதாகவும், இது புதிதாக இருப்பதால், யார் இந்த சம்பவத்தில் ஈடுபடுகின்றனர் என்பதையும் கண்டறிய முடியாமல் போலீசார் திகைத்து நிற்கின்றனர்.