/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
நகராட்சி வார்டு எண்ணிக்கை குறைப்பு? : புதுகையில் தி.மு.க.,- காங்., ஆர்ப்பாட்டம்
/
நகராட்சி வார்டு எண்ணிக்கை குறைப்பு? : புதுகையில் தி.மு.க.,- காங்., ஆர்ப்பாட்டம்
நகராட்சி வார்டு எண்ணிக்கை குறைப்பு? : புதுகையில் தி.மு.க.,- காங்., ஆர்ப்பாட்டம்
நகராட்சி வார்டு எண்ணிக்கை குறைப்பு? : புதுகையில் தி.மு.க.,- காங்., ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 13, 2011 02:33 AM
புதுக்கோட்டை: புதுக்கோட்டை நகராட்சியில் வார்டுகளின் எண்ணிக்கையை குறைக்க நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை கண்டித்து தி.மு.க., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடந்தது.
புதுக்கோட்டை கிராமப் பஞ்சாயத்து பகுதிகளை நகராட்சியுடன் இணைப்பதற்கான நடவடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளது. இதன் ஒருகட்டமாக மக்கள் தொகை அடிப்படையில் தற்போது நகராட்சிவசம் உள்ள 39 வார்டுகளில் 17 மற்றும் 25வது வார்டுகள் நீக்கம் செய்து இதன் எண்ணிக்கையை 37 ஆக குறைக்க நகராட்சி நிர்வாகம் முடிவுசெய்துள்ளது. இதற்கு தி.மு.க., மற்றும் காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நகராட்சியின் மக்கள் தொகை அதிகரித்துள்ள நிலையில் வார்டுகளின் எண்ணிக்கையும் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளைத் தான் நகராட்சி நிர்வாகம் எடுக்கவேண்டுமே தவிர குறைப்பதற்கான நடவடிக்கைகளை ஏற்க முடியாது.
தி.மு.க., மற்றும் காங்கிரஸ் கட்சி கவுன்சிலர்களை பழிவாங்குவதற்காகத் தான் இத்தகைய நடவடிக்கைகளை துவக்கியுள்ளதாக நகராட்சி நிர்வாகத்தின் மீது குற்றஞ்சாட்டி அண்மையில் நடந்த நகர்மன்ற கூட்டத்தில் தி.மு.க., மற்றும் காங்கிரஸ் கட்சி கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நகராட்சி வசம் உள்ள வார்டுகளின் எண்ணிக்கையை குறைப்பதற்காக நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை கண்டித்தும், இதை கைவிடக்கோரியும் நேற்று கண்டன ஆர்பாட்டம் நடந்தது. நகராட்சி அலுவலகம் முன் நடந்த ஆர்பாட்டத்துக்கு தி.மு.க., மாவட்டச் செயலாளர் பெரியண்ணன் அரசு தலைமை வகித்தார். அவைத்தலைவர் சந்திரசேகரன், துணைச் செயலாளர்கள் கவிதைப்பித்தன், மதியழகன், ராஜேஸ்வரி, நகரச் செயலாளர் வீரமணி, நகர்மன்ற துணைத் தலைவர் நைனாமுகம்மது, காங்கிரஸ் கட்சி கவுன்சிலர்கள் ஆறுமுகம், ஆனந்தன் உட்பட தி.மு.க., கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

