sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுக்கோட்டை

/

ரேஷன் விநியோகத்தில் முறைகேடா? குறைதீர் நாளில் புகார் கூற அழைப்பு

/

ரேஷன் விநியோகத்தில் முறைகேடா? குறைதீர் நாளில் புகார் கூற அழைப்பு

ரேஷன் விநியோகத்தில் முறைகேடா? குறைதீர் நாளில் புகார் கூற அழைப்பு

ரேஷன் விநியோகத்தில் முறைகேடா? குறைதீர் நாளில் புகார் கூற அழைப்பு


ADDED : ஜூலை 14, 2011 12:08 AM

Google News

ADDED : ஜூலை 14, 2011 12:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் ரேஷன் பொருட்கள் விநியோகத்தில் முறைகேடுகள் நடந்தால் இதுகுறித்து தாலுகாதோறும் நாளை (15ம் தேதி) நடைபெறவுள்ள குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் புகார் தெரிவிக்கலாம்.

புதுக்கோட்டை கலெக்டர் மகேஸ்வரி வெளியிட்ட அறிக்கை: பொதுவிநியோகத் திட்டத்தில் முறைகேடுகள் நடப்பதை அறவே ஒழிக்கும் விதமாக தாலுகா தோறும் நாளை காலை 10 மணி முதல் பகல் ஒருமணி வரை சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது. வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் தொடர்புடைய கூட்டுறவு சங்க தனி அலுவலர், பஞ்சாயத்து தலைவர், நுகர்வோர் குழுக்களின் பிரதிநிதிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். ரேஷன் கார்டுகள் மற்றும் ரேஷன் பொருட்கள் பெறுவதில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தாலோ, முறைகேடுகள் நடப்பது தெரியவந்தாலோ அதுகுறித்து கூட்டத்தில் புகார் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். புதுக்கோட்டை தாலுகா கீழப்புலவன்காடு, ஆலங்குடி தாலுகா வேங்கிடகுளம், திருமயம் தாலுகா இளஞ்சாவூர், குளத்தூர் தாலுகா களமாவூர், இலுப்பூர் தாலுகா வடுகபட்டி, கந்தர்வக்கோட்டை தாலுகா கொத்தம்பட்டி, ஆவுடையார்கோவில் தாலுகா குருங்களூர், அறந்தாங்கி தாலுகா மேலப்பட்டு, மணமேல்குடி தாலுகா விச்சூர், பொன்னமராவதி தாலுகா முள்ளிப்பட்டி, கறம்பக்குடி தாலுகா கருப்பட்டிப்பட்டி கிராமங்களில் இக்கூட்டம் நடக்கிறது.






      Dinamalar
      Follow us