தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுக்கோட்டை/ ஊருக்கே வீட்டுவரி கட்டிய பஞ்., விசாரிக்க ஊர்மக்கள் கோரிக்கை

ஊருக்கே வீட்டுவரி கட்டிய பஞ்., விசாரிக்க ஊர்மக்கள் கோரிக்கை

ஊருக்கே வீட்டுவரி கட்டிய பஞ்., விசாரிக்க ஊர்மக்கள் கோரிக்கை


ADDED : பிப் 27, 2025 01:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 27, 2025 01:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுக்கோட்டை, பிப். 27--

ஊருக்கே வீட்டுவரி கட்டிய ஊராட்சி நிர்வாகம் மீது விசாரணை செய்ய கோரி, புதுக்கோட்டை கலெக்டரிடம், கிராமமக்கள் மனு அளித்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே ஓக்கூர் ஊராட்சியில், 750 வீடுகள் உள்ளன; 2,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்நிலையில், மாதத்தின் முதல் வாரத்தில் ஊராட்சியைச் சேர்ந்த 500 வீடுகளுக்கு வீட்டுவரி, குடிநீர் வரி ஊராட்சி நிர்வாகத்தால், ஆன்லைன் மூலம் செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக, அவர்களது மொபைல்போனுக்கு எஸ்.எம்.எஸ்., வந்தது.

அதை பார்த்த குடியிருப்புவாசிகள், இன்னும் வரி கட்டாத நிலையில், பணம் செலுத்தியதாக எஸ்.எம்.எஸ்., வந்துள்ளதே என்று அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, இந்த கிராமத்தைச் சேர்ந்த முஜிபுர் ரகுமான் என்பவர், கலெக்டர், தாசில்தார், ஊராட்சிகள் உதவி இயக்குனர் ஆகியோருக்கு மனு அனுப்பியுள்ளார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

பிப்., 10ம் தேதிக்குப் பின், இணையதள ரசீதை கொடுத்து ஒவ்வொரு வீடாக பணம் கேட்டு வருகின்றனர். ஏற்கனவே, ஊராட்சியில் மின்விளக்குகள் பழுதடைந்துள்ள நிலையில், நிதி நெருக்கடியை காரணம் காட்டினர். அப்படி இருக்கும்போது, 500 வீடுகளுக்கு மேல் வீட்டு வரி, தண்ணீர் வரி செலுத்த பணம் எப்படி வந்தது? இதில், மோசடி நடந்துள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது. இதுதொடர்பாக, அமலாக்கத்துறை மூலம் விசாரணை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us