/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
மாற்றுத்திறனாளிக்கு இன்று சிறப்பு முகாம்
/
மாற்றுத்திறனாளிக்கு இன்று சிறப்பு முகாம்
ADDED : ஜூலை 14, 2011 11:48 PM
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் இன்று (15ம் தேதி) காலை ஒன்பது மணி முதல் நடக்கிறது.
மாற்றுத் திறனாளிகள் நல்வாழ்வுத் துறையின் மூலம் நடைபெறவுள்ள இந்த முகாமில் மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, செயற்கை கால், காதொலிக்கருவி மற்றும் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து மனு கொடுத்தால் இதன்மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.முகாமின்போது தனிப்பயிற்சிபெற்ற டாக்டர்கள் அடங்கிய மருத்துவக் குழுவினரால் இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. மருத்துவ சிகிச்சை மற்றும் அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் பெற விரும்பும் விராலிமலை பஞ்சாயத்து யூனியன் பகுதியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் முகாமில் பங்கேற்று மனு கொடுக்கலாம்.