ADDED : செப் 08, 2024 02:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாபட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நேற்று காலை, 63 விசைப்படகுகளில் 300க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி செந்தில் 28, மணிகண்டன் 52, பிரதீப் 27,க்கு சொந்தமான மூன்று விசைப்படகுகள் மற்றும் 25 முதல் 55 வயதுடைய 14 மீனவர்களை சிறைபிடித்து சென்றனர். காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.
இரு தினங்களுக்கு முன் புதுக்கோட்டை மீனவர்கள் நான்கு பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்த நிலையில், மீண்டும் 14 மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.