/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
விராலிமலை ஜல்லிக்கட்டு போட்டியில் 26 பேர் காயம்
/
விராலிமலை ஜல்லிக்கட்டு போட்டியில் 26 பேர் காயம்
ADDED : ஏப் 30, 2024 11:23 PM

புதுக்கோட்டை:விராலிமலை பகுதி யில் மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோவில் பூச்சொரிதல் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டி போட்டி நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை மெய்க்கண்ணுடையாள் அம்மன்கோவில் பூச்சொரிதல் திருவிழாவை முன்னிட்டு நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டி போட்டியில், திருச்சி, புதுக்கோட்டை, மணப்பாறை, விராலிமலை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 700 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
இதில், வாடிவாசலில் இருந்து சீறி பாய்ந்த காளைகளை 170 மாடுபிடி வீரர்கள் அடக்கினர்.
இந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் வீரர்கள், பார்வையாளர்கள், மாட்டின் உரிமையாளர் உட்பட 26 பேர் காயமடைந்தவர்களுக்கு அப்பகுதியில் மருத்துவ குழுவினர் முதழுதவி சிகிச்சை அளித்தனர்.
மேலும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பரிசு பொருட்கள் எதுவும் வழங்கப்படவில்லை.
ஜல்லிக்கட்டு விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்து இருந்தனர்.