/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
ஆடு திருடி கசாப் கடைக்கு விற்ற சிறுவன் உட்பட 3 பேர் கைது
/
ஆடு திருடி கசாப் கடைக்கு விற்ற சிறுவன் உட்பட 3 பேர் கைது
ஆடு திருடி கசாப் கடைக்கு விற்ற சிறுவன் உட்பட 3 பேர் கைது
ஆடு திருடி கசாப் கடைக்கு விற்ற சிறுவன் உட்பட 3 பேர் கைது
ADDED : ஜூலை 13, 2024 07:29 PM
புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி, ஆலங்குடி, கீரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் விவசாயிகளின் ஆடுகளை திருடிச் செல்வது தொடர்கதையாகி வருகிறது.
மழையூர் அருகே மோளுடையான்பட்டியில் நேற்று முன்தினம் இரவு 3 பேர் ஆடுகளை திருடிக்கொண்டு, அங்கிருந்து தப்பியோட முயன்றபோது, அப்பகுதி இளைஞர்கள் மூவரையும் பிடித்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
மழையூர் போலீசார் விசாரணையில், அவர்கள் ஆயிப்பட்டி கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் வேலுமணி, 24, சிவா, 20, என்பதும், பல மாதங்களாக, அப்பகுதியில் நுாற்றுக்கும் மேற்பட்ட ஆடுகளை திருடி, கசாப் கடைகளில் ஆடு ஒன்றை, 5,000 ரூபாய் முதல் 8,000 ரூபாய் வரை விற்றதும் தெரியவந்தது. மூவரையும் மழையூர் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
கடந்த 2021ல், திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே நவல்பட்டு போலீஸ் எஸ்.எஸ்.ஐ., பூமிநாதன் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது,, ஆடு திருடர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். அப்போது முதல் ஆடு திருட்டை தடுக்க போலீசார் ரோந்து சென்றாலும், திருட்டை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.