/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
ரூ.60 லட்சம் தங்க நகைகள் பறிமுதல்
/
ரூ.60 லட்சம் தங்க நகைகள் பறிமுதல்
ADDED : மார் 29, 2024 12:41 AM
புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதியும், கரூர் லோக்சபா தொகுதிக்குட்பட்ட பகுதியில் நிலையான கண்காணிப்பு குழுவினர் நேற்று இரவு வாகனத்தணிக்கை நடத்தினர்.
அப்போது விராலிமலை சுங்கச்சாவடி அருகே வேன் ஒன்றை சோதனை செய்து விசாரணை செய்தபோது அதில் உரிய ஆவணங்கள் இன்றி தங்க நகைகள் எடுத்துச் சென்றது தெரியவந்தது. கண்காணிப்பு குழுவினர் இலுப்பூர் ஆர்டிஓ அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
தங்க நகைகளை எடுத்துச் சென்ற பிவிசி லாஜிஸ்டிக்ஸ் நிறுவன ஊழியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் முன்னிலையில் தங்க நகைகள் கணக்கிடப்பட்டு பட்டியலிடப்பட்டது.
பின் 1206 கிராம் எடையுள்ள தங்க நகைகள் இருந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூபாய் 60 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆர்.டி.ஓ., தெய்வநாயகி, தாசில்தார் சூரியபிரபு ஆகியோர் இலுப்பூர் அரசு கருவூலத்திற்கு பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை அனுப்பி வைத்தனர்.

