/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
ஒரு நாள் தலைமையாசிரியராக பள்ளியில் மாணவி பொறுப்பேற்பு
/
ஒரு நாள் தலைமையாசிரியராக பள்ளியில் மாணவி பொறுப்பேற்பு
ஒரு நாள் தலைமையாசிரியராக பள்ளியில் மாணவி பொறுப்பேற்பு
ஒரு நாள் தலைமையாசிரியராக பள்ளியில் மாணவி பொறுப்பேற்பு
ADDED : ஜூன் 26, 2024 10:56 PM

புதுக்கோட்டை:புதுக்கோட்டை அரசு ராணியார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவியர் படிக்கின்றனர்.
இப்பள்ளி மாணவியருக்கு பள்ளி பருவத்திலேயே தலைமை பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக, பள்ளியில் நன்றாக படித்து பள்ளிக்கு பெருமை சேர்த்து வரும் மாணவியாக விளங்கும் பிளஸ்1 பயாலஜி வகுப்பில் படித்து வரும் மெய்வர்ஷிதா என்ற மாணவியை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் தேர்ந்தெடுத்து அவரை ஒரு நாள் தலைமை ஆசிரியராக அறிவித்து, பள்ளி தலைமை ஆசிரியர் தமிழரசி அவருக்கு ஒரு பணியானையை அளித்து, பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி தலைமையில் ஆசிரியர்கள் மாணவிகள் வாழ்த்து கூறி அவரை அழைத்து வந்து தலைமை ஆசிரியர் இருக்கையில் அமர வைத்தனர்.
தொடர்ந்து, பள்ளி தலைமையாசிரியராக இருக்கும் தமிழரசி மற்றும் ஆசிரியர்களும், மாணவிகளும் அவருக்கு வாழ்த்து கூறினர். ஒரு நாள் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்ற மாணவி மெய்வர்ஷிதா நேற்றைய வருகை பதிவேடு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், ஆசிரியர்களுடன் வகுப்பறைக்கு சென்ற மெய்வர்ஷிதா மாணவிகளுடன் கலந்துரையாடி, ஒரு நாள் பள்ளி தலைமை ஆசிரியராக நான் பணியாற்றி வருகிறேன். உங்களுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால் என்னிடம் கூறுங்கள். நான் ஆசிரியர்களிடம் எடுத்துக்கூறி அந்த குறைகளை நிவர்த்தி செய்கிறேன் என்றார்.
மாணவி ஒருவரையே ஒரு நாள் தலைமை ஆசிரியராக பணியமர்த்தி அவரை தலைமையாசிரியர் இருக்கையில் அமர வைத்து, அவர்களுக்கு அந்த பணியின் முக்கியத்துவம் மட்டும் அல்லாமல் அந்த பணியில் உள்ள சிரமங்கள் உள்ளிட்டவைகளை அறிந்து அதற்கு ஏற்றார் போல் தங்களுடைய தலைமை பண்பை வளர்த்துக் கொள்ள ஏதுவாக இது போன்ற முயற்சி எடுத்த தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களை அனைவரும் பாராட்டினர்.