/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான சொத்து குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு
/
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான சொத்து குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான சொத்து குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான சொத்து குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு
ADDED : ஜூன் 12, 2024 05:57 PM
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை ஜூலை 12ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றம் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, புதுக்கோட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறைசார்பில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து, நேற்று சொத்து குவிப்பு மீதான விசாரணை மற்றும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் மனைவி ரம்யா தன்னை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க கூடிய மனு மற்றும் சமீபத்தில் விஜயபாஸ்கர் வீட்டில், அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் அமலாக்கத்துறை சார்பில், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கை நகல்கள் மற்றும் ஆவணங்கள் ஆகியவற்றை தங்களுக்கு ஒரு நகல் வழங்க வேண்டும் என்று தாக்கல் செய்து இருந்த மனு மற்றும் விஜயபாஸ்கர் தரப்பில் தாக்கல் செய்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை கவர்னரிடம் முன் அனுமதி பெறாமல் வழக்கு பதிவு செய்துள்ளதால் இந்த வழக்கை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்ற தாக்கு செய்திருந்த மனு ஆகியவை விசாரணைக்கு வந்தது.
இதில், விஜய்பாஸ்கர் அவரது மனைவி ரம்யா ஆகியோர் ஆஜராகவில்லை. விஜயபாஸ்கர் வழக்கறிஞர்கள் மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை வழக்கறிஞர்களும் வாதாடினர். அமலாக்கத்துறை இந்த வழக்கு சார்பில் தாக்கல் செய்திருந்த நகல்களை பார்வையிடலாம், தேவைப்பட்டால் நீதிமன்ற அனுமதி பெற்று குறிப்பிட்ட நகல்களை நீதிமன்ற அனுமதி கொடுத்தவுடன் பெற்றுக் கொள்ளலாம். இதுதான் சட்டம் என்று விஜயபாஸ்கர் தலைப்பில் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பிலும் வாதிடப்பட்டது. அமலாக்கத்துறை சார்பில் நேற்று யாரும் ஆஜராகவில்லை. மேலும், இந்த வழக்கு விசாரணையை ஜூலை 12ம் தேதிக்கு நீதிபதி சுபத்ராதேவி ஒத்தி வைத்தார்.