/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
கஞ்சா விற்ற கல்லுாரி மாணவர் கைது
/
கஞ்சா விற்ற கல்லுாரி மாணவர் கைது
ADDED : ஆக 11, 2024 06:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி., வந்திதாபாண்டே உத்தரவின்படி, கறம்பக்குடி பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்ட போது, மாங்கான்கொல்லைப்பட்டியைச் சேர்ந்த தனியார் பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர் பரமசிவம், 19, சூரக்காடு பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தார்.
அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து, 1 கிலோ, 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கறம்பக்குடியில் கடந்த வாரம் போலீசார் நடத்திய சோதனையில், கஞ்சா விற்பனை செய்த, 15 வயது சிறுவன் மற்றும் ஒரு வாலிபர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது கல்லுாரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

