/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு.
/
குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு.
ADDED : மே 28, 2024 10:06 PM
புதுக்கோட்டை:கந்தர்வகோட்டை அருகே குளத்திற்கு குளிக்க சென்ற கல்லூரி மாணவர் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே கல்லாக்கோட்டை கிராமத்தை சேர்ந்த பீர்முகமது மகன் ரவுபல்(18 ), இவர் அப்பகுதியில் அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் கல்லாக்கோட்டை அருகில் உள்ள கண்ணுகுடிபட்டியில் உள்ள குளத்தில் நேற்று குளிக்க சென்றுள்ளார். குளித்துவிட்டு கரை திரும்பிய நண்பர்கள் ரவுபல் காணாது அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டுள்ளனர். அருகில் இருந்த கிராம பொதுமக்கள் குளத்தில் இறங்கி தேடி ரவுபல் உடலை மீட்டு அருகில் உள்ள வெள்ளாளவிடுதி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ரவுபல் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இது பற்றி அறிந்த கந்தர்வகோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.