/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
புத்தகக் கண்காட்சியில் கலந்து கொள்ளும் பேச்சாளர்கள் சிலர் ஒரு மதத்தை இழிவுபடுத்தி பேசுவதாக புகார்.
/
புத்தகக் கண்காட்சியில் கலந்து கொள்ளும் பேச்சாளர்கள் சிலர் ஒரு மதத்தை இழிவுபடுத்தி பேசுவதாக புகார்.
புத்தகக் கண்காட்சியில் கலந்து கொள்ளும் பேச்சாளர்கள் சிலர் ஒரு மதத்தை இழிவுபடுத்தி பேசுவதாக புகார்.
புத்தகக் கண்காட்சியில் கலந்து கொள்ளும் பேச்சாளர்கள் சிலர் ஒரு மதத்தை இழிவுபடுத்தி பேசுவதாக புகார்.
ADDED : ஆக 02, 2024 08:22 PM
புதுக்கோட்டை:புதுக்கோட்டையில் நடைபெற்று வரும் மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்தும் புத்தகக் கண்காட்சியில் கலந்து கொள்ளும் பேச்சாளர்கள் சிலர் ஒரு மதத்தை இழிவுபடுத்தி பேசும் நிலையில் கலைய வேண்டும் என்று சமூக ஆர்வலர் ஒருவர் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து கடந்த ஏழு தினங்களாக, புதுக்கோட்டை அரசு மன்னர் கலைக்கல்லூரி விளையாட்டு திடலில் புத்தகத் திருவிழாவை நடத்தி வருகிறது. இந்த திருவிழாவில் மாலை நேரங்களில் பல்வேறு தலைப்புகளில் பேச்சாளர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், பேச்சாளர்களில் சிலர் ஒரு மதத்தை இழிவுபடுத்தி பேசி வருவதாகவும் புத்தகத் திருவிழாவில், அரசியல் நுழைக்கப்பட்டு உள்ளதாகவும் இதனை மாவட்ட நிர்வாகம் எவ்வாறு அனுமதித்தது என்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் 20 லட்சம் ரூபாய் புத்தகத் திருவிழா நடத்துவதற்கு நிதி அளிக்கப்பட்டுளது. ஆனால் தாங்கள் நடத்துவது போன்று ஒரு சிலர் நடவடிக்கைகள் ஈடுபட்டு வருவதாகவும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளது.
இது குறித்து, சமூக ஆர்வலர் பரமஜோதி என்பவர் நேற்றுமுன் சமூக வலைதலை பக்கத்தில் இது தொடர்பாக பதிவிட்டு இருந்தார். இந்த பதிவிற்கு ஒரு அரசியல் கட்சி சார்பில், அவருக்கு பல எதிர்ப்புகள் வந்ததாகவும், கொலை மிரட்டல் வந்ததாகவும் கூறப்படுகிறது.
தொடர்ந்து, மாவட்ட கலெக்டரிடம் நேற்று சமூக ஆர்வலர் பரமஜோதி புத்தகத் திருவிழாவில், ஒரு குறிப்பிட்ட மதத்தை பேச்சாளர்கள் இழிவுபடுத்தி பேசி வருவது வேதனைக்குரியதாக உள்ளது என்றும் தனிப்பட்ட முறையில், ஒருவர் புத்தகத் திருவிழா நடத்தினால், எதுவும் பேசலாம்.
ஆனால், மாவட்ட நிர்வாகமும் அந்த அமைப்புடன் சேர்ந்து புத்தகத் திருவிழா நடத்தும் போது அரசியல் சார்பற்ற எந்த விதமான மத பிரச்சனையும் இல்லாதவாறு படுத்துவதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக, சமூக வலைதளத்தில் என்னுடைய கருத்தை பதிவிட்டு இருந்த நிலையில் ஒரு அரசியல் கட்சிகளில் சேர்ந்தவர்கள் தனக்கு கொலை மிரட்டல் விடுத்து பதிவு செய்துள்ளதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.