/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
திருமயம் கோட்டை பைரவர் கோவிலில் அமித்ஷா தரிசனம்
/
திருமயம் கோட்டை பைரவர் கோவிலில் அமித்ஷா தரிசனம்
ADDED : மே 30, 2024 07:51 PM

சிவகங்கை:புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், சத்தியமூர்த்தி பெருமாள் சத்யகிரீஸ்வரர் கோவில் மற்றும் கோட்டை பைரவர் கோவிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குடும்பத்துடன் தரிசனம் செய்தார்.
சிவகங்கை மாவட்டம் செட்டிநாடு கால்நடை பண்ணையில் உள்ள ஹெலிபேடு தளத்திற்கு தனி ஹெலிகாப்டரில் திருச்சியிலிருந்து அமித் ஷா மற்றும் குடும்பத்தினர் வந்தனர். அங்கிருந்து காரில் திருமயம் வந்த அவர், அங்குள்ள சத்தியமூர்த்தி பெருமாள் கோவில். சத்யகிரீஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்தார். குடும்பத்தினர் பெயரில் அர்ச்சனை செய்து உலக நன்மைக்காக பூஜை செய்தார்.
பின், கோட்டை பைரவர் கோவிலுக்கு வந்த அவர், சிறப்பு அபிஷேகத்தில் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தார். அங்கிருந்து மாலை 4:20 மணிக்கு காரில் புறப்பட்டு ெஹலிபேடுக்கு வந்து மீண்டும் திருச்சி சென்றார்.
மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் தேசிய செயலர் ஹெச். ராஜா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.