/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
ஜெகபர் அலி கொலை 3 பேருக்கு 'குண்டாஸ்'
/
ஜெகபர் அலி கொலை 3 பேருக்கு 'குண்டாஸ்'
ADDED : பிப் 24, 2025 02:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுக்கோட்டை,: புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் நடைபெறும் கனிமவள கொள்ளைக்கு எதிராக புகார் அளித்து வந்த ஜெகபர் அலி, ஜன., 17ல் லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் லாரி உரிமையாளர் முருகானந்தம், டிரைவர் காசிநாதன், கல்குவாரி உரிமையாளர்கள் ராசு, ராமையா, ராசுவின் மகன் மதன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் முருகானந்தம், ராசு, ராமையா ஆகிய மூவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க, சி.பி.சி.ஐ.டி., போலீசார் பரிந்துரையில், கலெக்டர் அருணா நேற்று உத்தரவிட்டார். அதன்படி, மூன்று பேரை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

