/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
தலையில் கல்லை போட்டு ஒருவர் கொலை
/
தலையில் கல்லை போட்டு ஒருவர் கொலை
ADDED : பிப் 24, 2025 02:50 AM
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், வீரடிப்பட்டியை சேர்ந்தவர் ராஜகோபால், 50; டேங்கர் லாரி வாயிலாக குடிநீர் விநியோகித்து வந்தார்.
டிராக்டரில் குடிநீர் ஏற்றிக்கொண்டு, நேற்று அதிகாலை பட்டுக்கோட்டை- - கந்தர்வகோட்டை சாலையில், மட்டங்கால் பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத நபர்கள், ராஜகோபாலை அருகில் உள்ள புதரில் தள்ளி, தலையில் பாராங்கல்லை போட்டு கொலை செய்து தப்பினர்.
அவ்வழியாக, சென்றவர்கள் கந்தர்வகோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
கந்தர்வகோட்டை இன்ஸ்பெக்டர் சுகுமார் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கொலை சம்பவத்தில் தொடர்புடைய தாமரைச்செல்வன், 55, கிள்ளுக்கோட்டையைச் சேர்ந்த இளையராஜா, 40, மலையேறிப்பட்டியைச் சேர்ந்த கருப்பையா, 37, தஞ்சை மாவட்டம், ஆச்சாம்பட்டியைச் சேர்ந்த நல்லாண்டவர், 22, என நான்கு பேரை நேற்று கைது செய்தனர்.

