/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
வனப்பரப்பை அதிகரிக்க நடவடிக்கை அமைச்சர் மெய்யநாதன் திட்டவட்டம்
/
வனப்பரப்பை அதிகரிக்க நடவடிக்கை அமைச்சர் மெய்யநாதன் திட்டவட்டம்
வனப்பரப்பை அதிகரிக்க நடவடிக்கை அமைச்சர் மெய்யநாதன் திட்டவட்டம்
வனப்பரப்பை அதிகரிக்க நடவடிக்கை அமைச்சர் மெய்யநாதன் திட்டவட்டம்
ADDED : ஜூலை 31, 2024 09:31 PM
புதுக்கோட்டை:புதுக்கோட்டை மன்னர் கல்லுாரியில் நடைபெற்று வரும் 7வது புத்தகத் திருவிழாவில் நேற்று முன்தினம் இரவு, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியதாவது:
கடந்த மூன்று ஆண்டுகளில் காலநிலை மாற்றத்துறையை உருவாக்கி, பல்வேறு திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். இதன்படி, 10 கோடி மரங்களை நடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தின் 1.30 லட்சம் சதுர கி.மீ., பரப்பளவில், 33 சதவிகிதம் அதாவது, 43,000 சதுர கி.மீ., பரப்பளவில் வனப்பரப்பு இருக்க வேண்டும். ஆனால், 31,000 சதுர கி.மீ., வனப்பரப்பு மட்டுமே உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் 1,000 சதுர கி.மீ., வனப்பரப்பு அதிகரித்திருக்கிறது. இன்னும் 12,000 சதுர கி.மீ., பரப்பளவு வனப்பரப்பையை உருவாக்க வேண்டும்.
அதேபோல, பனைமரத்தை வெட்டுவதற்கு மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெற வேண்டும் என்ற சட்டத்தை முதல்வர் கொண்டு வந்துள்ளார். நாட்டிலுள்ள 10 கோடி பனை மரங்களில், 5 கோடி பனை மரங்கள் தமிழகத்தில் தான் உள்ளன.
ஒவ்வொரு மனிதனுக்கும் வெவ்வேறு பக்கங்களை முழுமையாக அறிந்து கொள்ள நுால்கள் நமக்கு உதவும். புத்தகத் திருவிழாவை ஒருங்கிணைத்த மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்க ஒருங்கிணைப்பாளர்களுக்கு பாராட்டுக்கள். இவ்வாறு அவர் கூறினார்.