ADDED : செப் 12, 2024 12:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுக்கோட்டை:நாகப்பட்டினம், கரியாப் பட்டினத்தைச் சேர்ந்த விஜயகுமார் மனைவி நீலாவதி, 28, இருவருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன், திருமணம் நடைபெற்றது. நீலாவதி கடந்த 6 மாதமாக, மணமேல்குடி அருகே ராஜாதோப்பு பகுதியில், தன் 8 வயது மகளுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, நீலாவதி, கழுத்தில் சேலை சுற்றியபடி இறந்து கிடந்தார். மணமேல்குடி போலீசார், உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.