/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
வேங்கைவயல் வழக்கில் சிக்கியவருக்கு ' நோட்டீஸ் '
/
வேங்கைவயல் வழக்கில் சிக்கியவருக்கு ' நோட்டீஸ் '
ADDED : பிப் 22, 2025 01:44 AM
வேங்கைவயல்:வேங்கைவயல் விவகாரத்தில் சிக்கிய போலீஸ்காரர் முரளிராஜா, பணிக்கு வராமல் உள்ளதால், விளக்கம் கேட்டு, அவரது வீட்டு கதவில் போலீசார் நோட்டீஸ் ஒட்டினர்.
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தில், குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த வழக்கை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிக்கின்றனர்.
இவர்கள், அண்மையில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில், இந்த விவகாரத்தில் வேங்கைவயலைச் சேர்ந்த போலீஸ்காரர் முரளிராஜா உள்ளிட்ட மூவர் குற்றவாளிகள் என, கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த நாளில் இருந்து, போலீஸ்காரர் முரளிராஜா வேலைக்கு செல்லவில்லை. நேற்று, புதுக்கோட்டை எஸ்.பி., அபிஷேக் குப்தா உத்தரவுப்படி, தொடர்ந்து பணிக்கு வராத முரளிராஜா வீட்டு கதவில், விளக்கம் கேட்டு நோட்டீஸ் ஒட்டி உள்ளனர்.

