/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
புதுகையில் தாறுமாறாக வளர்ந்துள்ள தைல மரங்கள்; பல வகை மரங்களை உருவாக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
/
புதுகையில் தாறுமாறாக வளர்ந்துள்ள தைல மரங்கள்; பல வகை மரங்களை உருவாக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
புதுகையில் தாறுமாறாக வளர்ந்துள்ள தைல மரங்கள்; பல வகை மரங்களை உருவாக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
புதுகையில் தாறுமாறாக வளர்ந்துள்ள தைல மரங்கள்; பல வகை மரங்களை உருவாக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : மே 27, 2024 11:45 PM

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம், திருமயம், பொற்பனைகோட்டை, அரிமளம், அறந்தாங்கி, பொன்னமராவதி உள்ளிட்ட பகுதிகளில், தமிழகத்திலேயே அதிக அளவு தைல மரங்கள் பயிரிடப்பட்டுள்ளன.
இதனால், இம்மாவட்டத்தில் மழைப் பொழிவு குறைந்து, வானம் பார்த்த விவசாய பூமியாக மாறி விட்டது. இந்த தைல மரக்காடுகளில் இருந்த பல்லுயிர் தாவரங்கள் மற்றும் பல வகையான விலங்குகள் அழிந்து விட்டன.
மேலும், தைல மரக்காடுகளில் இருந்து வெளி வரும் வெப்பக்காற்று சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையிலும், தைல மர இலைகள் கீழே விழுந்து மண் வளத்திற்கும் கேடாக மாறி விட்டன.
ஒரு தைல மரத்தின் வேர், 30 அடி வரை செல்வதால், அருகில் உள்ள நீர்நிலைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டு, அழிவை நோக்கி விவசாயம் சென்றுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 61,000 ஏக்கரில் தைல மரங்கள் உள்ளன. இந்த இடங்கள், ஒரு காலத்தில் இயற்கை காடுகளாக இருந்து, அங்கே பல மூலிகைகளும் பலதரப்பட்ட பறவைகள், விலங்கினங்களும் இருந்தன.
இப்பகுதியில் தைல மரங்கள் உருவாக்கப்பட்டதன் விளைவாக அனைத்தும் அழிந்து வருகின்றன.
இது குறித்து, இந்தியவிவசாயிகள் சங்கம் மாநில பொதுச்செயலர் தனபதி கூறியதாவது:
'தமிழகத்தில், 100 ஏக்கர் நிலப்பரப்பில், 'தமிழ் வாழ்க' என்ற வடிவத்தில் முதல்வர் கூறும் இடத்தில் மரங்கள் வளர்க்கப்படும்' என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் அறிவித்தார்.
பல ஆயிரம் ஏக்கர் தைல மரக்காடுகள் உள்ள இடத்தில், தமிழ் வாழ்க என்ற எழுத்து வடிவிலான பல மரக்காடுகளை புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைக்க, தமிழக முதல்வர்உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து, மரம் வளர்ப்போர் சங்க மாவட்ட செயலர் தங்ககண்ணன் கூறியதாவது:
புதுக்கோட்டை மாவட்டத்தில், தைல மரங்களை அகற்றிவிட்டு இயற்கை காடுகளை கொண்டு வருவோம் என, தேர்தல் காலங்களில் மட்டும் கூறி வருகின்றனர்.
ஆனால், பதவிக்கு வந்த பின் யாரும் இது சம்பந்தமாக எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. தைல மரங்கள், கிளைகள் அடிப்படையில் வளர்ந்து வருகின்றன.
இவற்றை வளர விடாமல் வேருடன் பிடுங்கி அழிக்க வேண்டும். அந்த இடங்களில் தரம் உயர்ந்த மூங்கில் மரங்களை நடவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.