/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
7 வயது சிறுவன் விற்பனை மீட்க கலெக்டருக்கு மனு
/
7 வயது சிறுவன் விற்பனை மீட்க கலெக்டருக்கு மனு
ADDED : ஜூலை 08, 2024 06:39 AM
பேராவூரணி : தஞ்சாவூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பிரகாஷ், கலெக்டருக்கு, இ-மெயிலில் அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை அடுத்த பாப்பாகொல்லை பகுதியைச் சேர்ந்த, பெற்றோரை இழந்த 7 வயது சிறுவனை, அவரது தாத்தா, 30,000 ரூபாய் பெற்றுக் கொண்டு, ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையில் உள்ள ஆடு மேய்ப்பவர்களிடம் விற்று விட்டார்.
இது குறித்து ஜூன் 28ல், குழந்தைகள் பாதுகாப்பு அலகில் புகார் அளிக்கப்பட்டது. வி.ஏ.ஓ., உள்ளிட்ட வருவாய் துறையினர் சிறுவனின் தாத்தாவிடம் விசாரணை நடத்தினர். சிறுவனை அழைத்து வருவதாக கூறிச் சென்றவர் இதுவரை வரவில்லை.
சிறுவனை வைத்து ஆடு மேய்ப்பவர்கள் 30,000 ரூபாய் பணத்தை திருப்பி கொடுத்தால் தான் சிறுவனை விடுவிப்போம் என கூறியுள்ளனர். இதனால், முதியவர் பணம் இல்லாமல் சிறுவனை மீட்க முடியாமல் தவிக்கிறார். எனவே, மாவட்ட நிர்வாகம் சிறுவனை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.