/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
தீயணைப்பு நிலையம் அமைக்க கோரிக்கை
/
தீயணைப்பு நிலையம் அமைக்க கோரிக்கை
ADDED : ஏப் 24, 2024 08:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே அரிமளம் பகுதியில் திடீரென அவ்வபோது, பற்றி எரியும் காட்டு தீயை தீயணைப்புத்துறையினர் வருவதற்குள் பொதுமக்கள் செடி, கொடிகளை அடித்து தீயை கட்டுபடுத்த வேண்டியநிலை ஏற்படுகிறது. காரணம், அரிமளம் பகுதியில் தீயணைப்பு நிலையம் இல்லாததல், வெளியூர் பகுதியில் இருந்து தீயணைப்பு வாகனம் வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து, அரிமளம் பகுதியில் இதுவரை 50 ஏக்கருக்கும் மேல் காட்டுத்தீயால் தனியார் மற்றும் வனத்துறைக்கு சொந்தமான தைலமரக்காடுகள் அழிந்து நாசமாகி உள்ளன. எனவே, அரிமளம் பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

