/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
பயன்பாட்டிற்கு வரும் முன் ஒழுகும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ADDED : ஜூலை 11, 2024 01:42 AM

புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், வாண்டான் விடுதி பகுதியில் அரசு ஆரம்பப் பள்ளி வளாகத்தில், 8 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது.
இதிலிருந்து, வாண்டான் விடுதியை சேர்ந்த, 150க்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட உள்ளது.
இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி தரமற்ற முறையில் கட்டப்பட்ட போதே, அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதை பொருட்படுத்தாத ஒப்பந்ததாரர், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை தொடர்ந்து கட்டி முடித்ததாக கூறப்படுகிறது.
திறப்பு விழாவிற்கு முன்பே, இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் நான்கு புறங்களில் இருந்தும், நீர் கசிவு ஏற்பட்டு தண்ணீர் பீய்ச்சி அடித்து, வெளியேறி வருகிறது. இதை அறிந்த ஒப்பந்ததாரர், தற்காலிகமாக, சிமென்ட் பூசி, அந்த குறையை சரி செய்ததாக கூறப்படுகிறது.
அந்த குடிநீர் தொட்டியை கட்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட கம்பிகள் தரமற்ற முறையில் இருந்ததால் தான், இந்த பிரச்னை ஏற்பட்டுள்ளது என, அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இந்த குடிநீர் தொட்டியை தமிழக அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அப்புறப்படுத்தி, புதிய தொட்டியை வலுவாக அமைத்து தர வேண்டும். மேலும், தரமற்ற முறையில் கட்டிய ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.