/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
ஆடிபெருக்கு விழாவை முன்னிட்டு மாணவர்கள் இழுத்த சிறிய தேர்
/
ஆடிபெருக்கு விழாவை முன்னிட்டு மாணவர்கள் இழுத்த சிறிய தேர்
ஆடிபெருக்கு விழாவை முன்னிட்டு மாணவர்கள் இழுத்த சிறிய தேர்
ஆடிபெருக்கு விழாவை முன்னிட்டு மாணவர்கள் இழுத்த சிறிய தேர்
ADDED : ஆக 03, 2024 10:08 PM

புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே மாங்கோட்டை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இது நுாற்றாண்டு கண்ட அரசு பள்ளியாக விளங்குகிறது. இப்பள்ளியில், 500க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர்கள் படித்து வருகின்றனர்.
தொடர்ந்து, ஆடிபெருக்கு விழாவை முன்னிட்டு, மாணவ - மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்குவதற்காக, அப்பள்ளியில் படிக்கும் மாணவ - மாணவிகள், முன்னாள் மாணவர்கள் மற்றும் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள் ஆகியோர் ஒன்றிணைந்து நேற்று சிறிய தேர் ஒன்றை செய்து, அதில் கல்விக்கு உகந்த தெய்வமான சரஸ்வதி போட்டோவை வைத்து தொடக்கப்பள்ளியிலிருந்து, சிறிய தேரை வடம் பிடித்து, ஊரின் முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. பின்னர், மாணவர்களுக்கு சரஸ்வதி படத்தின் கீழே வைத்து பூஜை செய்யப்பட்ட எழுது பொருட்கள் வழங்கப்பட்டன.