/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
வெள்ளை நிற பஞ்சுமிட்டாய் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
/
வெள்ளை நிற பஞ்சுமிட்டாய் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
ADDED : ஆக 18, 2024 02:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுக்கோட்டை:கலர்பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டதால், பஞ்சு மிட்டாய்க்கு தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை உட்பட, மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில், வெள்ளை நிறத்திலான பஞ்சு மிட்டாய்களை,  விற்பனை செய்து வருகின்றனர்.
இதை, குழந்தைகள் வாங்கிச் சாப்பிடுகின்றனர். கலர் இல்லாத வெள்ளை நிற பஞ்சு மிட்டாய்களில், ஏதேனும் ரசாயனம் உள்ளதா என்று அந்தந்த பகுதி, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

