/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
இளம் பெண்ணை கொன்றவர் போலீசுக்கு பயந்து தற்கொலை
/
இளம் பெண்ணை கொன்றவர் போலீசுக்கு பயந்து தற்கொலை
ADDED : செப் 14, 2024 01:49 AM
புதுக்கோட்டை, :நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே காரியபட்டினம் பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவர் மனைவி நீலாவதி, 28. கணவரை பிரிந்து, 8 வயது மகளுடன் புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் உள்ள ராஜாதோப்பு பகுதியில் வசித்து வந்தார். கடந்த 11ம் தேதி, வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
மணமேல்குடி போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அந்த பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிந்தது. அவரின் மகளை முத்துப்பட்டினம் ஜாம்பவானோடை பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர், 30, என்பவர், பள்ளியிலிருந்து அழைத்து சென்றதும், நீலாவதியின் தாய் வீட்டில் அந்த சிறுமியை விட்டு சென்றதும் தெரிந்தது.
நீலாவதியுடன் ரகசிய தொடர்பில் இருந்த சந்திரசேகர், சம்பவத்தன்று பிறருடன் தொடர்பில் இருந்ததாக கூறி, அந்த பெண்ணுடன் தகராறு செய்து அவரை கழுத்தை நெரித்து கொலை செய்தது, போலீஸ் விசாரணையில் தெரிந்தது. போலீசார் தன்னை பிடித்து விடுவர் என கருதிய சந்திரசேகர், போலீசாருக்கு பயந்து, நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.