/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
காவிரி நீரை மலர் துாவி வரவேற்ற பொதுமக்கள்
/
காவிரி நீரை மலர் துாவி வரவேற்ற பொதுமக்கள்
ADDED : ஆக 03, 2024 11:41 PM

புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டத்தில் காவிரி கடைமடை பகுதிகளில் ஆலங்குடி, அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி தாலுகா பகுதிகளில் 30,000 ஏக்கர் நிலங்கள் காவிரி நீர் பாசன வசதி பெறுகின்றன. கடந்த சில நாட்களுக்குமுன் மேட்டூர் அணையிலிருந்து, டெல்டா உள்ளிட்ட பகுதிகளில் குறுவை சாகுபடி விவசாயத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.
தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்ட காவிரி கடைமடை பகுதிகளில் தற்போது, கல்லணை கால்வாய், சீரமைக்கு பணி நடைபெற்று வருகிறது. இதனிடையே, தஞ்சாவூர் - புதுக்கோட்டை மாவட்ட எல்லை பகுதி ஈச்சன்விடுதி பாலம் பகுதிக்கு நேற்று காவிரி நீர் வந்தது. அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் காவேரி நீரை மலர் துாவி வரவேற்றனர்.
மேலும், பல வருடமாக போதிய விளைச்சல் இல்லாமல் விவசாயம் முற்றிலும் அழிந்து, விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்தாண்டு காவிரி நீர் தொடர்ந்து வந்தால் தான், விவசாயிகளின் வாழ்வு வளம்பெறும். எனவே, காவிரி நீரை தடையின்றி வழங்க வேண்டும் என காவிரி கடைமடை பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.