/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
மின்சாரம் பாய்ந்து விபத்து இருவர் பலி; 3 பேர் காயம்
/
மின்சாரம் பாய்ந்து விபத்து இருவர் பலி; 3 பேர் காயம்
மின்சாரம் பாய்ந்து விபத்து இருவர் பலி; 3 பேர் காயம்
மின்சாரம் பாய்ந்து விபத்து இருவர் பலி; 3 பேர் காயம்
ADDED : மார் 03, 2025 06:48 AM
புதுக்கோட்டை; புதுக்கோட்டை மாவட்டத்தில் இருவேறு சம்பவங்களில் மின்சாரம் பாய்ந்த விபத்தில் இருவர் பலியாகினர்; மூன்று பேர் படுகாயமடைந்தனர்.
புதுக்கோட்டை, பாலன் நகரைச் சேர்ந்த தாமரைச்செல்வன் நிலத்தில், மதுரையை சேர்ந்த மேஸ்திரி முத்துக்குமார், 50, குடிசை போட்டு தங்கி உள்ளார். அந்த குடிசை சிதிலமடைந்ததால், புதிய கூரை வேயும் பணி நேற்று நடந்தது.
இதில், புதுராஜாபட்டியைச் சேர்ந்த சின்னையா, 60, உட்பட நான்கு தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பழைய குடிசையில் சுற்றப்பட்டு இருந்த மின்கம்பியில் இருந்து மின்சாரம் அவர்கள் மீது பாய்ந்து, சின்னையா பரிதாபமாக உயிரிழந்தார்; மற்ற மூன்று தொழிலாளர்களும் காயமடைந்தனர்.
மற்றொரு சம்பவத்தில், புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில், அம்மன் கோவில் ஏழாம் ஆண்டு வருஷாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு கோவில் பகுதியை சுற்றி ஒலிபெருக்கிகள் கட்டப்பட்டன.
நேற்று முன்தினம் நள்ளிரவில், விராலிமலை கடைவீதி அருகே ஹைமாஸ் லைட் கம்பத்தில் ஒலிபெருக்கி கட்டியபோது, அவ்வழியாக சென்ற குறைந்த அழுத்த மின்வட கம்மி எதிர்பாராதவிதமாக உரசியதில், விராலிமலை, சரளபட்டி ரமேஷ், 22, என்ற இளைஞர் கம்பத்தில் இருந்து துாக்கி வீசப்பட்டு இறந்தார்.