/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
இரு அமைச்சர்கள் இருந்து என்ன பயன்? கஞ்சா கும்பலால் அலறும் பொதுமக்கள்
/
இரு அமைச்சர்கள் இருந்து என்ன பயன்? கஞ்சா கும்பலால் அலறும் பொதுமக்கள்
இரு அமைச்சர்கள் இருந்து என்ன பயன்? கஞ்சா கும்பலால் அலறும் பொதுமக்கள்
இரு அமைச்சர்கள் இருந்து என்ன பயன்? கஞ்சா கும்பலால் அலறும் பொதுமக்கள்
ADDED : ஜூலை 01, 2024 07:02 AM

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பகுதியில் பைக்கில் மர்ம நபர்கள் சில நாட்களாக, கையில் அரிவாள் ஏந்தி, வர்த்தகர்கள், பொதுமக்களை மிரட்டி வருகின்றனர். இது குறித்து, சமூக ஆர்வலர்கள், இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியினர் உட்பட பலர் ஆலங்குடி போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.
நேற்று மாலை, 5:00 மணி அளவில் ஆலங்குடி அரசமரம் பகுதியில் வீச்சரிவாளோடு இரு மர்ம நபர்கள், மத்திய கூட்டுறவு வங்கி ஏ.டி.எம்., மற்றும் அருகில் உள்ள பெட்டி கடை, ஜவுளி கடை, பூக்கடை, டீக்கடை, சாலையோரம் இருந்த பைக்குகளை அரிவாளால் அடித்து நொறுக்கி அராஜகத்தில் ஈடுபட்டனர்.
அங்கிருந்தவர்கள் உயிர் பயத்தில் அங்கும், இங்கும் ஓடினர். ஆலங்குடி வர்த்தகர்கள் பதற்றத்திலும், பயத்தோடு கடைகளை அடைத்து ஓடினர்.
ஆலங்குடி பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் தாராளமாக புழங்குகின்றன.
போலீசாருக்கு தெரிந்தும், இதுவரை போதை பொருட்கள் விற்பவர்கள் மீதும், கள்ளத்தனமாக மது விற்பனை செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால், ஆலங்குடியில் போதை பேர்வழிகளும், ரவுடிகளும் வளர்ந்து வருகின்றனர்.
சட்டத்துறை அமைச்சரின் மாவட்டத்தில், சுற்றுசூழல் துறை அமைச்சரின் தொகுதியில் இவ்வாறு நடைபெறும் அராஜகங்களால் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.