/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
15ம் நுாற்றாண்டு பெருமாள் சிலை புதுகை அருகே கண்டெடுப்பு
/
15ம் நுாற்றாண்டு பெருமாள் சிலை புதுகை அருகே கண்டெடுப்பு
15ம் நுாற்றாண்டு பெருமாள் சிலை புதுகை அருகே கண்டெடுப்பு
15ம் நுாற்றாண்டு பெருமாள் சிலை புதுகை அருகே கண்டெடுப்பு
ADDED : மார் 31, 2025 01:21 AM

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அரசுக்கலை அறிவியல் கல்லுாரி தமிழ் துறைத் தலைவர் மற்றும் தொல்லியல் வரலாற்று ஆய்வாளர் காளிதாஸ் குழுவினர் புதுக்கோட்டை வடமலாப்பூரில் நேற்று கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பெருமாள் சிலை ஒன்றைக் கண்டறிந்தனர்.
காளிதாஸ் கூறியதாவது:
கி.பி., 15, 16ம் நுாற்றாண்டில் பல்லவ மன்னர்கள் இப்பகுதியை ஆட்சி செய்தனர்.
இச்சிலை பல்லவ பாணியில் கலை நுணுக்கத்தோடு செய்யப்பட்டுள்ளது.இரு காதுகளிலும் அணிகலன் அணிந்து தொங்கு காதாகவும், பட்டு பீதாம்பரம், முப்புரி நுால், சங்கு, சக்கரம் போன்றவற்றையும், பொன்னும், வைரமும் பதிக்கப்பட்ட நீள்கிரீடத்தையும் அணிந்து வரத முத்திரையோடும் அபயமுத்திரையோடும் காட்சி தருகிறார்.
இச்சிலையை மாவட்ட நிர்வாகம் மீட்டெடுத்து அருங்காட்சியகத்தில் ஆவணப்படுத்திப் பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.