ADDED : ஆக 25, 2026 12:59 AM
மச்சுவாடி: திருட்டு வழக்கில் சிக்கிய விசாரணை கைதி மாரிமுத்து, 22, என்பவர், தப்பிய வழக்கில், போலீஸ்காரர்கள் மனோஜ்குமார், 34, கார்த்திக், 33, ஆகியோர், சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம், மச்சுவாடி பகுதியில், ஆக., 17ல் நடந்த தொடர் திருட்டுகள் தொடர்பாக, தனிப்படை போலீசார், மதுரையை சேர்ந்த மாரிமுத்து என்பவரை, திருப்பூரில் வைத்து கைது செய்தனர். அதன்பின், கணேஷ் நகர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.
மருத்துவ பரிசோதணைக்காக மாரிமுத்துவை, புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு, நேற்று முன்தினம் மதியம், பைக்கில், போலீஸ்காரர்கள் மனோஜ்குமார், கார்த்திக் ஆகியோர் அழைத்துச் சென்றனர். மருத்துவமனை அருகே சென்றபோது, போலீசாரை தள்ளிவிட்டு, மாரிமுத்து தப்பினார். அவரை, போலீசார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், கவனக்குறைவாக செயல் பட்டதாக, மனோஜ்குமார், கார்த்திக் ஆகியோரை, மாவட்ட எஸ்.பி., ரவிந்தரகுமார் குப்தா, சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
