/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
முன்னறிவிப்பு இன்றி காவிரி நீர் திறப்பால் 25 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்

ADDED : ஜன 30, 2025 02:27 AM

புதுக்கோட்டை:கந்தர்வகோட்டை அருகே குளத்துார்நாயக்கன்பட்டி, கோவில்பட்டி ஆகிய கடைமடை பகுதிகளில், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, இரவு நேரத்தில் காவிரி ஆற்று நீர் திறக்கப்பட்டதால், அறுவடை செய்யப்பட்டும், செய்யப்படாமலும் இருந்த 25 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே குளத்துார்நாயக்கன்பட்டி, கோவில்பட்டி கிராமங்களில், 1,000த்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் விவசாயத்தை நம்பி வாழ்க்கை நடத்துகின்றன. தஞ்சை மாவட்டம், செல்லம்பட்டி பகுதியில் இருந்து உளவயல் கிளை வாய்க்கால் மூலமாக, காவிரி ஆற்று நீர் பாசனம் பெற்று விவசாயம் செய்து வந்தனர்.
இதில், விவசாயம் நன்கு விளைந்த நிலையில் அறுவடை செய்யும் பணியில், கடந்த இரு நாட்களாக விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு நேரத்தில், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, தஞ்சை மாவட்ட, செல்லம்பட்டி பகுதியில் இருந்து காவிரி ஆற்று நீரை உளவயல் கிளை வாய்க்காலில் திறந்து விட்டதாகவும், இதனால், தாங்கள் அறுவடை செய்த நெற்பயிர்களும், அறுவடை செய்யாமல் உள்ள நெற்பயிர்களும் நீரில் மூழ்கியுள்ளதாகவும், விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.