/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
மலையக்கோவில் ஜல்லிக்கட்டில் 30 பேர் காயம்
/
மலையக்கோவில் ஜல்லிக்கட்டில் 30 பேர் காயம்
ADDED : ஜன 28, 2024 01:47 AM

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே மலையக்கோவிலில் நேற்று காலை, 9:00 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டியில், புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து, 750 காளைகள், 240 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.
போட்டியில் பங்கேற்ற வீரர்கள் மற்றும் காளைகளுக்கு முழு மருத்துவ பரிசோதனை நடந்தது. வாடிவாசலில் அவிழ்த்துவிடப்பட்ட காளைகளை அடக்க முயன்ற வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள், 30 பேர் காயமடைந்தனர்.
இவர்கள் சிகிச்சைக்காக, திருமயம், புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.