/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
மர்ம காய்ச்சலுக்கு 5 வயது சிறுவன் பலி
/
மர்ம காய்ச்சலுக்கு 5 வயது சிறுவன் பலி
ADDED : நவ 26, 2024 02:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே சுக்கிரன்விடுதியை சேர்ந்த லாரி டிரைவர் மதி, 35. இவரது மனைவி முருகேஸ்வரி, 30. இவர்களுக்கு பிரகதிஸ்வரன், 5, என்ற மகனும், 1 வயதில் ஆண் குழந்தையும் இருந்தனர்.
சிறுவன் பிரகதிஸ்வரனுக்கு நான்கு நாட்களுக்கு முன் மர்ம காய்ச்சல் இருந்துள்ளது. சிகிச்சைக்காக, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். கறம்பக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.