/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
தண்ணீர் தொட்டியில் 6 மாத குழந்தை மர்ம சாவு
/
தண்ணீர் தொட்டியில் 6 மாத குழந்தை மர்ம சாவு
ADDED : ஏப் 07, 2025 01:31 AM
கீரனுார்: வீட்டிற்குள் துாங்கிக் கொண்டிருந்த ஆறு மாத ஆண் குழந்தை, மர்மமான முறையில் தண்ணீர் தொட்டியில் இறந்து கிடந்தது.
புதுக்கோட்டை மாவட்டம், கீரனுார் அருகே குளவாய்பட்டியைச் சேர்ந்தவர் மணிகண்டன், 29. இவர், மஹராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி லாவண்யா, 21. தம்பதிக்கு ஆறு மாத ஆண் குழந்தை இருந்தது. தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. லாவண்யா தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில், தந்தை வீட்டில் இருந்த லாவண்யா நேற்று முன்தினம் அதிகாலை வீட்டிற்கு வெளியே சென்ற போது, இரு மர்ம நபர்கள் லாவண்யாவின் வாயில் துணியை வைத்து அழுத்தி, 2 சவரன் தங்க செயினை பறித்து, வீட்டிற்குள் துாங்கிக் கொண்டிருந்த குழந்தையை துாக்கிச் சென்றதாக கூறப்படுகிறது.
லாவண்யாவின் பெற்றோர், உறவினர்கள் குழந்தையை தேடினர். ஒரு மணி நேரம் கழித்து பார்த்த போது, குழந்தை வீட்டிற்கு வெளியில் உள்ள தண்ணீர் பேரலில் இறந்த நிலையில் மிதந்துள்ளது. கீரனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

