ADDED : ஜூன் 09, 2026 06:50 AM

அ நிறம் | அளவு
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில், அனுமதி இன்றி செயல்பட்ட, எட்டு கல் குவாரிகளை மூட, அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்படும் கல் குவாரிகளில், புவியியல், சுரங்கத்துறை அதிகாரிகள், 10 நாட்களாக ஆய்வு மற்றும் அளவீடு ப ணியில் ஈடுபட்டனர்.
மாவட்டத்தில் மொத்தமாக அனுமதி பெற்று செயல்படும், 73 கல் குவாரிகள் மற்றும் அனுமதி இல்லாமல் செயல்பட்ட கல் குவாரிகளிலும், அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
இதில், எட்டு கல் குவாரிகள், அரசு அனுமதி இன்றி செயல்பட்டது தெரிந்தது. இந்த குவாரிகளை மூட, அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
