ADDED : பிப் 01, 2025 01:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுக்கோட்டை:வெறிநாய் கடித்ததில், ஒன்பது பேர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், கருப்புடையான்பட்டி, கூத்தாச்சிப்பட்டி பகுதியில் நேற்று ஒரு வெறிநாய் துரத்தித் துரத்தி கடித்ததில், ஒன்பது பேர் காயமடைந்தனர். இவர்கள், பெருங்களூர், ஆதனக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இப்பகுதியில் ஆடு, மாடு போன்ற சில கால்நடைகளையும் வெறிநாய் கடித்துக் குதறியதாக பொதுமக்கள் தெரிவித்தனர். மக்களையும், கால்நடைகளையும் அச்சுறுத்தி வரும் வெறிநாயை உடனடியாக பிடிக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.