/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
குவாரியில் அளவுக்கு மீறி கல் எடுத்தது அம்பலம்
/
குவாரியில் அளவுக்கு மீறி கல் எடுத்தது அம்பலம்
ADDED : ஜன 29, 2025 01:48 AM
திருமயம்:திருமயம் அருகே துளையனுாரில் உள்ள ஆர்.ஆர்., குவாரியில் கனிம வளத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், அரசு நிர்ணயித்த அளவை விட அதிகமாக கற்களை வெட்டி எடுத்துள்ளது தெரியவந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே துளையனுாரில் ஆர்.ஆர்., கல் குவாரி உள்ளது. இங்கு அரசு நிர்ணயித்த அளவை விட, கூடுதல் கற்கள் வெட்டி எடுக்கப்படுவதாக சமூக ஆர்வலர் ஜெகபர் அலி, அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.
கடந்த 17ம் தேதி அவர், இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பும் போது, லாரி மோதி கொல்லப்பட்டார். இதனால், கல் குவாரி உரிமையாளர்கள் ராமையா, ராசு உள்ளிட்ட ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிக்கின்றனர். அத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கல் குவாரியில் ஆய்வு நடத்தினர். அதில், இரண்டு ஆண்டுகளாக உரிமம் இல்லாமல் செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அரசு நிர்ணயித்த அளவை விட அதிகமாக கற்களை வெட்டி எடுத்துள்ளதும் தெரிய வந்துள்ளது.
இந்த அறிக்கை, கனிம வளத்துறை இயக்குநருக்கு சமர்ப்பிக்கப்படும். அதன்படி, மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுப்பார் என, கனிம வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

