/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
பழமையான கல் மரங்கள் புதுகை அருகே கண்டுபிடிப்பு
/
பழமையான கல் மரங்கள் புதுகை அருகே கண்டுபிடிப்பு
ADDED : ஆக 06, 2025 10:52 PM

புதுக்கோட்டை:'திருமயம் அருகே வனப்பகுதிக்குள் கேட்பாரற்று கிடக்கும் பழமையான கல் மரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழக அரசுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே செங்கீரை பகுதியின் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள், நேற்று முன்தினம், அப்பகுதி பள்ளி மாணவர்கள் சிலர் சென்றனர்.
அப்போது மிகவும் பழமையான கல் மரம் கிடப்பதைப் பார்த்து, தங்களின் கிராமத்தைச் சேர்ந்தவர்களிடம் கூறினர். அப்பகுதியினர், அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
கிராமத்தினர் கூறியதாவது:
செங்கீரை, ஒரு காப்புக்காடுகள் பகுதி. இது காலப்போக்கில் தைல மரக்காடாகி விட்டது. இந்த வனம், மிக தொன்மையானது. இந்த பகுதியில், பல லட்சம் ஆண்டுகள் பழமை யான கல் மரம் கண் டெடுக்கப்பட்டுள்ளது.
மரத்தின் சிறுபாகமே, தரையில் உள்ளது. மரத்தின் பெரும் பாகம், பல கிளைகளாக தரைக்கு அடியில் புதைந்துள்ளது. எனவே, கல் மரங்களை பாதுகாக்க, எங்கள் ஊரிலோ, பள்ளியிலோ இதன் பழமை குறித்த விளக்கத்துடன் காட்சிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.