/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
பச்சிளம் குழந்தை உடல் கண்மாயில் கண்டெடுப்பு
/
பச்சிளம் குழந்தை உடல் கண்மாயில் கண்டெடுப்பு
ADDED : செப் 08, 2025 03:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே கண்மாயில் அழுகிய நிலையில், பச்சிளம் பெண் குழந்தை சடலம் மீட்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே நாகமங்கலம் கிராமத்தில் உள்ள கண்மாயில், நேற்று பச்சிளம் பெண் குழந்தை சடலம் தண்ணீரில் அழுகிய நிலையில் மிதந்தது.
இதுகுறித்து, தகவலறிந்த நாகுடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, குழந்தையின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த குழந்தை பிறந்து, 10 நாட்கள் இருக்கும் என தெரிகிறது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.