/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
நீர் பாதையில் ஆக்கிரமிப்புகள் அகற்ற வினோத போராட்டம்
/
நீர் பாதையில் ஆக்கிரமிப்புகள் அகற்ற வினோத போராட்டம்
நீர் பாதையில் ஆக்கிரமிப்புகள் அகற்ற வினோத போராட்டம்
நீர் பாதையில் ஆக்கிரமிப்புகள் அகற்ற வினோத போராட்டம்
ADDED : டிச 10, 2024 07:05 AM

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் உள்ள ராட்டினக்குளம், பங்களாகுளம், கோழிகுடப்புகுளங்களுக்கு வரும் நீர்வரத்து பாதைகள் மற்றும் சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி, கலெக்டர், வருவாய் துறையினரிடம் மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என கூறப்படுகிறது.
இது தொடர்பாக, வி.சி., கட்சி சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில், ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில், வரத்து பாதைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, உயர் நீதிமன்றம் 2016ல் உத்தரவு பிறப்பித்தது.
அப்போது, பேரூராட்சி நிர்வாகம் ஒருசில இடங்களில் மட்டுமே ஆக்கிரமிப்புகளை அகற்றியதாக கூறப்படுகிறது. அதன் பிறகும், குளங்களுக்கு வர வேண்டிய மழைநீர் வருவதில்லை. இதனால், அப்பகுதியில் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்ற தவறிய பேரூராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய் துறையினரை கண்டித்து, கறம்பக்குடியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி வி.சி., கட்சியினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின், விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய் துறையினர் உறுதியளித்ததால், போராட்டத்தை கைவிட்டனர்.

