/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
ரூ.82 லட்சம் திருட்டில் சகோதரர்கள் கைது
/
ரூ.82 லட்சம் திருட்டில் சகோதரர்கள் கைது
ADDED : பிப் 10, 2024 02:09 AM
புதுக்கோட்டை:புதுக்கோட்டையில் தனியார் எல்.இ.டி. விளக்கு ஒப்பந்த நிறுவன மேற்பார்வையாளராக பணியாற்றி வருபவர் சதீஷ்குமார் 33. இவர் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க 5ம் தேதி காலை அந்நிறுவனத்தில் பணியாற்றும் உதவியாளர் கார்த்திக் 32 என்பவருடன் காரில் 82 லட்சம் ரூபாயை எடுத்துக் கொண்டு புதுக்கோட்டையில் இருந்து புறப்பட்டார்.
கட்டியாவயல் அருகே உள்ள அதே நிறுவனத்திற்கு சொந்தமான பெட்ரோல் பங்கில் காருக்கு டீசல் நிரப்ப நிறுத்தப்பட்ட போது காரிலிருந்த 82 லட்சம் ரூபாய் பணப்பைகளை திருடிக் கொண்டு டிரைவர் பூங்குடி ராமன் 25 தப்பியோடினார்.
போலீசாரின் தீவிர தேடுதலில் பூங்குடியை சேர்ந்த செல்வமணி 19 புத்தாம்பூரை சேர்ந்த சண்முகம் 25 ஆகியோர் மறுநாள் கைது செய்யப்பட்டனர்.
புத்தாம்பூரில் காட்டுப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்ட 75 லட்சம் ரூபாயை போலீசார் மீட்டனர். டிரைவர் ராமனை தனிப்படை போலீசார் தஞ்சாவூரில் கைது செய்தனர். அவரது தம்பி லட்சுமணனை புதுக்கோட்டையில் கைது செய்தனர்.