ADDED : ஏப் 22, 2026 01:25 AM

அ நிறம் | அளவு
புதுக்கோட்டை: புதுக்கோட்டை சட்டசபை தொகுதி மழையூரில், நா.த.க., கட்சி பிரசார வாகனம் தீப்பற்றி எரிந்து சேதமானது.
புதுக்கோட்டை சட்டசபை தொகுதி நா.த.க., வேட்பாளராக எழிலரசி என்பவர் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து நேற்று மழையூர் பகுதியில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தரும் வாக்குறுதிகள் குறித்த எல்.இ.டி., திரையுடன் கூடிய வாகனம் பிரசார ஈடுபடுத்தப்பட்டது. டிரைவர் ஹரி வாகனத்தை ஓட்டி வந்தார்.
தொடர்ந்து, மழையூர் போலீஸ் ஸ்டேஷன் எதிரே வந்தபோது, வாகனத்தின் பின் பகுதி எரிவதைக் கண்ட மக்கள் வாகனத்தை நிறுத்தி டிரைவரிடம் தகவலை தெரிவித்தனர். வாகனத்தை விட்டு டிரைவர் இறங்கியபின், திடீரென வாகனம் முழுதும் தீ பற்றி எரிந்தது. கறம்பக்குடி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.
