/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
அறந்தாங்கியில் காங்., தோற்கும்; தி.மு.க., 'மாஜி' பேச்சால் சர்ச்சை
/
அறந்தாங்கியில் காங்., தோற்கும்; தி.மு.க., 'மாஜி' பேச்சால் சர்ச்சை
அறந்தாங்கியில் காங்., தோற்கும்; தி.மு.க., 'மாஜி' பேச்சால் சர்ச்சை
அறந்தாங்கியில் காங்., தோற்கும்; தி.மு.க., 'மாஜி' பேச்சால் சர்ச்சை
ADDED : மே 13, 2025 05:42 AM
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்ட சபை தொகுதிக்கு உட்பட்ட அமரடக்கியில், தி.மு.க., சார்பில் தமிழக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம், நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், பங்கேற்று முன்னாள் எம்.எல்.ஏ., உதயம் சண்முகம் பேசியதாவது:
கடந்த 2006ம் ஆண்டு முதல் 2011 வரை நான் எம்.எல்.ஏ.,வாக இருந்தேன். அப்போது, அறந்தாங்கி தொகுதிக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் சாலை வசதி அமைத்து கொடுத்ததோடு, பேருந்து வசதியையும் ஏற்படுத்தி கொடுத்தேன்.
ஆனால், அறந்தாங்கி தொகுதிக்கு ஒரு புதிய பேருந்துகூட, தற்போதைய காங்., - எம்.எல்.ஏ.,வால் பெற்றுக்கொடுக்க முடியவில்லை. அதேபோல, சாலை வசதி ஏதும் இல்லாத தொகுதியாக உள்ளது. இது வெட்கப்பட வேண்டிய விஷயம். வரும் சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசரின் மகனான தற்போதைய எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் போட்டியிட்டால் தோல்வி அடைவது நிச்சயம்.
எனவே, அறந்தாங்கி தொகுதி மக்கள் தி.மு.க.,விற்குதான் ஓட்டளிக்க வேண்டும். இந்த தகவல் தலைமைக்கு சென்று, கூட்டணி கட்சி எம்.எல்.ஏ., குறித்து இப்படி பேசலாமா என கேள்வி கேட்டால், அதற்கு பதில் சொல்லவும் தயாராக இருக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டணி கட்சியைச் சேர்ந்த ஒருவர் எம்.எல்.ஏ.,வாக இருக்கும் சூழலில், முன்னாள் தி.மு.க., - எம்.எல்-.ஏ., இப்படி பேசி இருப்பது, இரு கட்சியினரிடையேயும் நெருடலை ஏற்படுத்தியுள்ளது.