/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
ஒரே நாளில் 8,110 பேர் மனுத்தாக்கல்
/
ஒரே நாளில் 8,110 பேர் மனுத்தாக்கல்
ADDED : செப் 30, 2011 12:42 AM
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட
கடைசி நாளான நேற்று ஒரே நாளில் 8,110 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இதன்மூலம் மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 16
ஆயிரத்து 57 ஆனது. புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தமுள்ள நான்காயிரத்து 750
உள்ளாட்சிமன்ற பதவியிடங்களில் போட்டியிட விரும்புபவர்களிடமிருந்து கடந்த
22ம் தேதி முதல் வேட்புமனுக்குள் பெறப்பட்டு வந்தது. 28ம் தேதிவரை 7,947
பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி
நாளான நேற்று மட்டும் 8,110 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். ஊரக
உள்ளாட்சி அமைப்புகளான மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 143 பேர் நேற்று
வேட்புமனு தாக்கல் செய்தனர். பஞ்ச., யூனியன் கவுன்சிலர் பதவிக்கு 1,006
பேரும், பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 1,569 பேரும், பஞ்சாயத்து வார்டு
உறுப்பினர் பதவிக்கு 4,532 பேரும் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான நகராட்சி தலைவர் பதவிக்கு 15 பேர்
வேட்புமனு தாக்கல் செய்தனர். நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு 350 பேர்
வேட்புமனு தாக்கல் செய்தனர். டவுன் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 54 பேர்,
டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர் பதவிக்கு 441 பேர் வேட்புமனு தாக்கல்
செய்தனர். இதன்மூலம் அம்மாவட்டத்தில் உள்ளாட்சிமன்ற பதவிகளுக்காக வேட்புமனு
தாக்கல் செய்துள்ளவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 57 ஆக எகிறியுள்ளது.
இன்று(30ம் தேதி) வேட்புமனு பரிசீலனை நடக்கிறது. அக்டோபர் 3ம் தேதி
மனுக்கள் வாபஸ் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.