/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
ஆத்மநாத சுவாமி கோவில் கல்வெட்டு கண்டெடுப்பு
/
ஆத்மநாத சுவாமி கோவில் கல்வெட்டு கண்டெடுப்பு
ADDED : செப் 28, 2025 03:57 AM

புதுக்கோட்டை,:ஏம்பல் அருகே, திராவிடங்கி கிராமத்தில், திருப்பெருந்துறை ஆத்மநாத சுவாமியின் ஊர் குறித்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.
தொல்லியல் கல்வெட்டு வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் காளிதாஸ், அவரது குழுவினர், நேற்று மதகம், குருங்களூர், திராவிடங்கி போன்ற ஊர்களில் கள ஆய்வு மேற்கொண்டனர்.
காளிதாஸ் கூறியதாவது:
புதுக்கோட்டை மாவட்டம், திராவிடங்கி கிராமத்தில், குளம் அருகில், திருப்பெருந்துறை என்ற ஆவுடையார் கோவில் ஆத்மநாத சுவாமிக்கு திருவிடையாட்டமாக கொடுக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றை கண்டறிந்து படி எடுக்கப்பட்டது.
இக்கல்வெட்டில், சூரிய சந்திர உருவமும், சிவலிங்கம், குருந்தமரம் போன்றவையும் புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளன. இக்கல்வெட்டு, 1,328ம் ஆண்டை சேர்ந்தது.
உய்ய வந்தான் திருநோக்கு அழகிய தொண்டமானார், இவ்வூரை திருப்பெருந்துறை ஆளுடைய பரம சுவாமிக்கு, ஆத்மநாதருக்கு திருவிடையாட்டமாக அளித்துள்ளது தெரிகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.